தேங்காய் பொடி சாதம்


தேவையான பொருட்கள் 

  • சாதம் 
  • தேங்காய் 
  • காய்ந்த மிளகாய் 
  • பூண்டு 
  • கடலைப்பருப்பு 
  • கடுகு 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • தேங்காய் எண்ணெய் 


செய்முறை 

கடாயில், 1/2 கப் துருவிய தேங்காய், மூன்று காய்ந்த மிளகாய், இரண்டு பல் பூண்டு சேர்த்து வறுத்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.  

மற்றொரு கடாயில், நான்கு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், 1/2 ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு கப் சாதம், அரைத்து வைத்துள்ள தேங்காய் , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். 

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post