தேவையான பொருட்கள்
- சாதம்
- கறிவேப்பிலை
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- கடுகு
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
செய்முறை
கடாயில், ஒரு கப் கறிவேப்பிலை, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து விடவும். பின், இரண்டு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
