கோதுமை மாவு-ரவா தோசை


தேவையான பொருட்கள் 

  • கோதுமை மாவு 
  • ரவை 
  • தயிர் 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள் 
  • சீரகம் 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, இரண்டு பச்சை மிளகாய், ¼ ஸ்பூன் சீரகம் சேர்த்து லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். 

பாத்திரத்தில், ஒரு கப் கோதுமை மாவு, ¼ கப் ரவை, ¼ கப் தயிர், வதக்கி வைத்துள்ள வெங்காயம், தேவையான அளவு உப்பு, சிறிதளவு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திலிருந்து சிறிதளவு கெட்டியாக கலந்து 30 நிமிடம் வைக்கவும்.

பின், தோசைக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். 


Previous Post Next Post