தேவையான பொருட்கள்
- முட்டை
- சேமியா
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- இஞ்சி-பூண்டு விழுது
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- கறி மசாலா தூள்
- மிளகுத்தூள்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ½ ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ½ ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன், ஒரு கப் பொன்னிறமாக வறுத்த சேமியா சேர்த்து, சேமியா வெந்த பின், இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி மேலும் அதனுடன், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து முட்டை வேகும் வரை நன்கு கலந்துவிடவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்துவிடவும்.
