வெஜிடபிள் அவல்


தேவையான பொருட்கள் 

  • அவல்
  • பெரிய வெங்காயம் 
  • கேரட் 
  • பீன்ஸ்
  • பச்சை பட்டாணி 
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள் 
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ½ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், ¼ கப் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், வேக வைத்த பச்சை பட்டாணி (மூன்றும் சேர்த்து ¼ கப்), தேவையான அளவு உப்பு, ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

வதங்கிய பின், ஒரு கப் தண்ணீரில் நனைத்த அவல், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்துவிடவும். 


Previous Post Next Post