வெங்காய ரவா உப்புமா


தேவையான பொருட்கள் 

  • ரவை
  • பெரிய வெங்காயம் 
  • பாசிப்பருப்பு 
  • பச்சை மிளகாய்
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், ஒரு கப் ரவை, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், ஆறு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு, ¼ கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், 1.5 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும். 

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்க்கவும். 


Previous Post Next Post