தேவையான பொருட்கள்
- சாதம்
- புளி
- மிளகு
- காய்ந்த மிளகாய்
- கடுகு
- உளுந்து பருப்பு
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் உளுந்து பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், 1½ ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு சேர்த்து ஒரு நிமிடம் விட்டு ¼ டம்ளர் புளிக்கரைசல், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும்.
பின், ஒரு கப் சாதம் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
