தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம்
- தேங்காய் பால்
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- சோம்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ½ ஸ்பூன் சோம்பு, சிறிதளவு இஞ்சி, ஒரு பச்சை மிளகாய் நன்கு தட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், தட்டி வைத்துள்ள விழுது, சிறிதளவு கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கப் தேங்காய் பால், தேவையான அளவு உப்பு, ½ கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தவும்.
