தேவையான பொருட்கள்
- பூண்டு
- தயிர்
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கடுகு
- உளுந்து பருப்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய 10 பல் பூண்டு, 5 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
ஆறிய பின், ½ கப் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
