தேவையான பொருட்கள்
- கேரட்
- தயிர்
- இஞ்சி
- பச்சை மிளகாய்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் தயிர், ¼ கப் துருவிய கேரட், ½ ஸ்பூன் துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தயிரைத் தாளிக்கவும்.
