பூண்டு-புளி துவையல்


தேவையான பொருட்கள் 

  • பூண்டு 
  • புளி
  • காய்ந்த மிளகாய்
  • தேங்காய் 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், 15 பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வதங்கிய பின், மூன்று காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி ஆறிய பின், ¼ கப் துருவிய தேங்காய், சிறிதளவு புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். 

Previous Post Next Post