தேவையான பொருட்கள்
- சாதம்
- தக்காளி
- சீரகம்
- மிளகு
- பெரிய வெங்காயம்
- கடுகு
- உளுந்து பருப்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், இரண்டு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் மிளகு கொரகொரப்பாக தட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய மூன்று தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பின், தட்டி வைத்துள்ள மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் கலந்துவிட்டு இரண்டு கப் சாதம், சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
