தக்காளி தயிர் குழம்பு

தேவையான பொருட்கள்

  • தக்காளி 
  • சின்ன வெங்காயம் 
  • தயிர் 
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள் 
  • மிளகாய் தூள் 
  • பெருங்காயத்தூள் 
  • கடலைப்பருப்பு 
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 


செய்முறை 

முதலில், ½ கப் தயிர், ½ கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்.‌

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½‌ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய நான்கு சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ½ ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

பின், ½ கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து மூன்று நிமிடம் கொதிக்க வைக்கவும்.

பின்னர், தயிர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து நன்கு கலந்துவிட்டு கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்திவிடவும். 

Previous Post Next Post