தேங்காய் மிளகாய் சாதம்


தேவையான பொருட்கள் 

  • சாதம் 
  • தேங்காய் 
  • காய்ந்த மிளகாய்
  • உளுந்து பருப்பு 
  • கடலைப்பருப்பு 
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், மூன்று காய்ந்த மிளகாய், ½ கப் துருவிய தேங்காய் பொன்னிறமாக வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பின், தேவையான அளவு உப்பு, ஒரு கப் சாதம், சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்துவிடவும். 

Previous Post Next Post