தேவையான பொருட்கள்
- தோசை மாவு
- கேரட்
- உருளைக்கிழங்கு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், ¼ கப் துருவிய கேரட், ½ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின், ½ கப் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கலந்துவிடவும்.
பின்னர், தோசைக்கல்லில் தோசை ஊற்றி அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள மசாலா தேவைக்கேற்ப வைத்து வேக வைத்து தோசையை மடித்து எடுக்கவும்.
