தேவையான பொருட்கள்
- சாதம்
- கேரட்
- பீன்ஸ்
- முட்டைக்கோஸ்
- குடைமிளகாய்
- பச்சை பட்டாணி
- சோயா சாஸ்
- மிளகுத்தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
கடாயில், ஆறு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ கப் பொடியாக நறுக்கிய கேரட்-பீன்ஸ்-முட்டைக்கோஸ் (மூன்றும் சேர்த்து ½ கப்), ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, இரண்டு ஸ்பூன் வேக வைத்த பச்சை பட்டாணி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கப் சாதம், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், நான்கு ஸ்பூன் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், இரண்டு ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து நான்கு கலந்துவிடவும்.
