தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய்
- பெரிய வெங்காயம்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- கடுகு
- உப்பு
- கறிவேப்பிலை
- எண்ணெய்
செய்முறை
கடாயில், 5 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய மூன்று பெரிய கத்திரிக்காய், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை நன்கு வதக்கவும்.
