தேவையான பொருட்கள்
- மீன்
- எலுமிச்சை சாறு
- மிளகுத்தூள்
- மீன் சில்லி பொடி
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில், 300 கிராம் மீனை தேவைக்கேற்ப சிறிய துண்டுகளாக வெட்டி அதனுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மீன் சில்லி பொடி சேர்த்து கலந்து பத்து நிமிடம் வைக்கவும்.
பின், தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து ஃப்ரை செய்து எடுக்கவும்.
