பீட்ரூட் தேங்காய் பொரியல்


தேவையான பொருட்கள் 

  • பீட்ரூட் 
  • தேங்காய் 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய்
  • கடலைப்பருப்பு 
  • மிளகாய் தூள் 
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், ஒரு கப் துருவிய பீட்ரூட், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, ¼ கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.

இறுதியாக, ¼ கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்துவிட்டு இரண்டு நிமிடம் விடவும்.

Previous Post Next Post