தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- தயிர்
- கடுகு
- வெந்தயம்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் வெந்தயம், சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய எட்டு சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கிய பின், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், ½ கப் தயிர், ½ கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தவும்.
