தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய்
- தயிர்
- மஞ்சள் தூள்
- கடுகு
- சீரகம்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய இரண்டு கத்திரிக்காய், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ½ கப் தயிர், தேவையான அளவு உப்பு, ¼ கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தவும்.
