தேவையான பொருட்கள்
- அவல்
- புளி
- காய்ந்த மிளகாய்
- மஞ்சள் தூள்
- கடுகு
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ஒரு கப் அவல் தண்ணீரில் நனைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்த பின், ¼ கப் புளிக்கரைசல், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து புளிக்கரைசல் சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும்.
பின், ஒரு கப் அவல் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
