பூண்டு-மிளகு சாதம்


தேவையான பொருட்கள் 

  • சாதம் 
  • பூண்டு 
  • மிளகு 
  • கடுகு 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய 10 பல் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வதங்கிய பின், இரண்டு ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின், ஒரு கப் சாதம் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.


Previous Post Next Post