வெங்காய முட்டை குழம்பு


தேவையான பொருட்கள் 

  • முட்டை 
  • பெரிய வெங்காயம் 
  • முட்டை மசாலா தூள் 
  • பூண்டு 
  • தக்காளி 
  • பச்சை மிளகாய் 
  • மிளகுத்தூள் 
  • மஞ்சள் தூள்
  • சோம்பு 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை


செய்முறை 

கடாயில், 10 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, நீளமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஐந்து பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பின், 4 ஸ்பூன் முட்டை மசாலா தூள், இரண்டு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். 

பின்னர், வேக‌ வைத்து தோலை நீக்கிய நான்கு முட்டை, 1/2 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்கவும். 

இறுதியாக, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post