தேவையான பொருட்கள்
- காளான்
- மிளகுத்தூள்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கறி மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- பூண்டு
- சோம்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய ஐந்து பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், 200 கிராம் நறுக்கிய காளான், தேவையான அளவு உப்பு சேர்த்து காளானில் உள்ள தண்ணீர் பிரிந்து சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
இறுதியாக, ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள், சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
