தேவையான பொருட்கள்
- வெந்தயக்கீரை
- தேங்காய்
- பாசிப்பருப்பு
- உளுந்து பருப்பு
- காய்ந்த மிளகாய்
- பெரிய வெங்காயம்
- மஞ்சள் தூள்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், ஆறு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய், நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு கப் வெந்தயக்கீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின், 1/4 டம்ளர் தண்ணீர், 1/4 கப் தேங்காய் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை நன்கு வதக்கவும்.
