கார புளி வெண்டைக்காய் வறுவல்


தேவையான பொருட்கள் 

  • வெண்டைக்காய் 
  • புளி 
  • பெரிய வெங்காயம் 
  • மிளகாய் தூள்
  • சாம்பார் தூள்
  • மஞ்சள் தூள் 
  • உப்பு 
  • கடுகு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், பொடியாக நறுக்கிய ஒரு கப் வெண்டைக்காய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், ஆறு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு, 1/4 டம்ளர் புளிக்கரைசல் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து புளிக்கரைசல் சுண்டி வரும் வரை வதக்கவும். 

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post