தேங்காய் பிரியாணி


தேவையான பொருட்கள் 

  • பாஸ்மதி அரிசி 
  • தேங்காய் 
  • பச்சை மிளகாய் 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • ஏலக்காய்
  • கிராம்பு 
  • பட்டை 
  • சோம்பு 
  • பிரியாணி இலை 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • நெய்
  • கறிவேப்பிலை
  • புதினா 

செய்முறை 

முதலில், ½ கப் துருவிய தேங்காய், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஏலக்காய், ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

குக்கரில், நான்கு ஸ்பூன் நெய், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 3 கிராம்பு, ஒரு பட்டை, ஒரு பிரியாணி இலை, நீளமாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு‌ ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். 

பின், அரைத்து வைத்துள்ள தேங்காய், ஒரு கைப்பிடி புதினா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். ‌ 

பின்னர், தேவையான அளவு உப்பு, 1.5 கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் 15 நிமிடம் ஊற வைத்த ஒரு கப் பாஸ்மதி அரிசி சேர்த்து ஒரு விசில் விடவும். 

Previous Post Next Post