தேவையான பொருட்கள்
- அரிசி மாவு
- தயிர்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கடலைப்பருப்பு
- சீரகம்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் அரிசி மாவு, ¼ கப் தயிர், ¾ கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கரைத்து கொள்ளவும்.
கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ¼ ஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து லேசாக வதக்கி தயார் செய்து வைத்துள்ள மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும். மேலும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்துவிடவும்.
பின், பணியாரக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
