சின்ன வெங்காய சிக்கன் வறுவல்


தேவையான பொருட்கள் 

  • சிக்கன் 
  • சின்ன வெங்காயம் 
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • சிக்கன் மசாலா தூள் 
  • காய்ந்த மிளகாய்
  • இஞ்சி 
  • பூண்டு 
  • சோம்பு 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் சோம்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ¼ கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், ½ ஸ்பூன் துருவிய இஞ்சி, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், 300 கிராம் சிக்கன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

பின், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.

இறுதியாக, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post