தயிர் மிளகு சேமியா


தேவையான பொருட்கள் 

  • சேமியா 
  • தயிர் 
  • மிளகு 
  • கடுகு 
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை 

செய்முறை

பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், ஒரு கப் சேமியா, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டி விடவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ஒரு பச்சை மிளகாய், ½ ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், வேக வைத்த சேமியாவை சேர்த்து கிளறவும்.

பின், அடுப்பை நிறுத்தி ½ கப் தயிர், ஒரு ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post