தக்காளி மினி‌ ஊத்தாப்பம்


தேவையான பொருட்கள்

  • தோசை மாவு 
  • தக்காளி 
  • வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • சீரகம் 
  • உப்பு 
  • எண்ணெய் 

செய்முறை

முதலில், ஒரு தக்காளி, ¼ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து ஒரு கப் தோசை மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடாயில், ஒரு ஸ்பூன் எண்ணெய், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், ¼ ஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்கி தோசை மாவில் சேர்த்து கலந்து விடவும்.

பின், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து, தோசைக்கல்லில் மினி ஊத்தாப்பம் போல் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.


Previous Post Next Post