தேவையான பொருட்கள்
- தேங்காய்
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- உளுந்து பருப்பு
- கடலைப்பருப்பு
- புளி
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின், ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 2 நிமிடம் வதக்கவும்.
ஆறிய பின், சிறிதளவு புளி (சின்ன நெல்லிக்காய் அளவு), தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
பின், கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
