தக்காளி-மிளகு சாதம்


தேவையான பொருட்கள்

  • சாதம் 
  • தக்காளி 
  • மிளகு 
  • கடுகு 
  • பூண்டு 
  • மிளகாய் தூள் 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் ஒன்றிரண்டாக தட்டிய மிளகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய மூன்று பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், ½ ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர், ஒரு கப் சாதம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post