முருங்கைக்காய்-மிளகு குழம்பு


தேவையான பொருட்கள்

  • முருங்கைக்காய்
  • சின்ன வெங்காயம் 
  • காய்ந்த மிளகாய்
  • பூண்டு 
  • தக்காளி 
  • புளிக்கரைசல் 
  • மஞ்சள் தூள் 
  • மிளகாய் தூள்
  • மிளகு 
  • சீரகம் 
  • கடுகு 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 

செய்முறை

கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய், ஆறு பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், 1½ ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு சேர்த்து வதக்கவும்.

பின், நறுக்கிய இரண்டு முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பின்னர், ¼ டம்ளர் புளிக்கரைசல், ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான‌ அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

Previous Post Next Post