வெஜ் சாண்ட்விச்


தேவையான பொருட்கள்

  • பிரெட்
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • கேரட்
  • பீன்ஸ் 
  • மஞ்சள் தூள் 
  • மிளகாய் தூள் 
  • உப்பு 
  • எண்ணெய்


செய்முறை

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், ½ ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ½ கப் காய்கறிகள் (கேரட், பீன்ஸ் இரண்டும் சேர்த்து ½ கப்), ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து வதக்கவும்.

பின், ஒரு பிரெட் துண்டை வைத்து அதன் மேல் வதக்கி வைத்துள்ள காய்கறிகள் வைத்து அதன் மேல் மற்றொரு பிரெட் துண்டை வைத்து தோசைக்கல்லில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்யவும்.

Previous Post Next Post