காய்கறி கோதுமை உப்புமா


தேவையான பொருட்கள்

  • கோதுமை ரவை 
  • பெரிய வெங்காயம் 
  • கேரட்
  • பீன்ஸ் 
  • தக்காளி 
  • இஞ்சி 
  • பச்சை மிளகாய் 
  • கடுகு 
  • உளுந்து பருப்பு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை

செய்முறை

கடாயில், ஆறு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்து பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ¼ ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின், பொடியாக நறுக்கிய ½ கப் காய்கறிகள் (கேரட், பீன்ஸ் இரண்டும் சேர்த்து ½ கப்) சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், ஒரு கப் கோதுமை ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி மூடி வைத்து வேக வைக்கவும்.


Previous Post Next Post