தேவையான பொருட்கள்
- தக்காளி
- கறிவேப்பிலை
- பூண்டு
- காய்ந்த மிளகாய்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், இரண்டு தக்காளி, மூன்று பல் பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
ஆறிய பின், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
பின், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து சட்னியை தாளித்துக் கொள்ளவும்.
