தேவையான பொருட்கள்
- மோர்
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- கேரட்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு ஸ்பூன் சின்ன வெங்காயம், ½ ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், அடுப்பை நிறுத்திவிட்டு ஒரு கப் மோர், தேவையான அளவு உப்பு, சிறிதளவு துருவிய கேரட், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்த்து கலந்துவிடவும்.
சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
