தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு
- காய்ந்த மிளகாய்
- பெரிய வெங்காயம்
- சீரகம்
- பூண்டு
- கறிவேப்பிலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில், ½ கப் பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த பாசிப்பருப்புடன், மூன்று காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்து வைத்துள்ள மாவில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
பின், தோசைக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
