வெந்தய-பூண்டு தயிர் குழம்பு


தேவையான பொருட்கள்

  • தயிர்
  • வெந்தயம் 
  • பூண்டு 
  • பச்சை மிளகாய் 
  • மஞ்சள் தூள் 
  • கடுகு
  • காய்ந்த மிளகாய் 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 

செய்முறை

கடாயில், மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் வெந்தயம், ஆறு பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின், அடுப்பை மெதுவாக வைத்து, ஒரு கப் புளிக்காத தயிர், ¼ கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தவும்.‌

பின்னர், மற்றொரு கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து தயார் செய்து வைத்துள்ள குழம்பில் சேர்க்கவும்.‌


Previous Post Next Post