தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம்
- புளி
- மிளகாய் தூள்
- வெல்லம்
- கடுகு
- வெந்தயம்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் ½ ஸ்பூன் கடுகு, ¼ ஸ்பூன் வெந்தயம், சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய மூன்று பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
பின், ¼ டம்ளர் புளிக்கரைசல், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
பின்னர், கெட்டியாக வந்ததும் ஒரு சிட்டிகை வெல்லம் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
