தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு
- கடலைப்பருப்பு
- மிளகு
- காய்ந்த மிளகாய்
- உப்பு
செய்முறை
முதலில், ½ கப் துவரம் பருப்பு, ¼ கப் கடலைப்பருப்பு, 1½ ஸ்பூன் மிளகு, நான்கு காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியாக எண்ணெய் சேர்க்காமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
இந்த பொடியை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
