தேவையான பொருட்கள்
- முட்டை
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
கடாயில், மூன்று ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய நான்கு ஸ்பூன் பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் (3 நிமிடம்).
பின், இரண்டு முட்டை உடைத்து சேர்த்து தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவும் (2 நிமிடம்).
பின், முட்டை நன்கு வேகும் வரை கிளறவும் (5 நிமிடம்).
