தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- இஞ்சி-பூண்டு விழுது
- தேங்காய்
- முந்திரி
- மிளகாய் தூள்
- மல்லித்தூள்
- கரம் மசாலா
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், ½ கப் தேங்காய், ஐந்து முந்திரி விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ¼ ஸ்பூன் கடுகு, நீளமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின், இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், ½ ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
பின்னர், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கத் தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தி சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
