தேவையான பொருட்கள்
- சாதம்
- உருளைக்கிழங்கு
- பெரிய வெங்காயம்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின், பாதி அளவு வேக வைத்து பொடியாக நறுக்கிய ¼ கப் உருளைக்கிழங்கு, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர், 1½ கப் சாதம் சேர்த்து கலந்துவிடவும்.
