தேவையான பொருட்கள்
- பால்
- பாதாம் பருப்பு
- சர்க்கரை
- பால் பவுடர்
செய்முறை
ஒரு கடாயில் 1/2 லிட்டர் பால், 50 கிராம் பால் பவுடர், 50 கிராம் சர்க்கரை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் நன்கு கலந்து விடவும்.
இதனுடன் 50 கிராம் பாதாம் பருப்பை பொடியாக அரைத்து சேர்க்கவும். சேர்த்துள்ள பால் பாதி அளவாக குறையும் வரை நன்கு கலந்து விடவும்.
இதனை ஆறவைத்து ஒரு ஸ்டோரேஜ் கண்டெய்னரில் ஊற்றி ஆறு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
