தேவையான பொருட்கள்
- சாக்லேட் பிஸ்கட்
- சர்க்கரை பவுடர்
- பால்
- டார்க் சாக்லேட்
செய்முறை
20 சாக்லேட் பிஸ்கட்டை நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் 1/2 லிட்டர் பால், 50 கிராம் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள சாக்லேட் பிஸ்கட் மற்றும் 50 கிராம் டார்க் சாக்லேட் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கலந்து விடவும்.
ஆறிய பின் ஒரு ஸ்டோரேஜ் கண்டெய்னரில் இதனை ஊற்றி ஆறு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
