தேவையான பொருட்கள்
- சேமியா
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- எண்ணெய்
- கடுகு
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கடாயில் 200 கிராம் சேமியா, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
மற்றொரு கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து வதக்கவும்.
இதனுடன் 150 மில்லி தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கிளறவும்.
இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
