தேவையான பொருட்கள்
- ராகி மாவு
- வேர்க்கடலை
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- சோம்பு
- மஞ்சள் தூள்
- எண்ணெய்
- உப்பு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
200 கிராம் ராகி மாவுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து பொடிக்கவும்.
ஒரு கடாயில் 50 மில்லி எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின், வேக வைத்துள்ள ராகி மாவு, தேவையான அளவு உப்பு, 50 கிராம் தோல் நீக்கிய வேர்க்கடலையை நன்கு அரைத்து சேர்த்து கிளறவும்.
இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
